ஆர்யா
ஆர்யா படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
- இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
- இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
கேப்டன் போஸ்டர்
"கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் "கைலா" பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் யாசின் நிஷார் பாடியுள்ளனர்.
The wave of love and magic coming your way. #Kylaa in @shreyaghoshal & #YazinNizar voices releases tomorrow at 5PM! 💕🎵@arya_offl @ShaktiRajan @Udhaystalin @SimranbaggaOffc #AishwaryaLekshmi @immancomposer @madhankarky @ThinkStudiosInd #TheShowPeople @thinkmusicindia pic.twitter.com/ZxKmdZnZl8
— Red Giant Movies (@RedGiantMovies_) August 10, 2022