வீடியோவில் வைரலாகும் சிறுமியின் பெயர், விவரம் கேட்கும் இமான்.. ஏன் தெரியுமா?
- இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
- இவர் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இப்படி பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில், ஏழை சிறுமி ஒருவர் அப்பா குறித்து பாடும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பார்த்த டி.இமான் சிறுமிக்கு உதவி செய்யும் நோக்கில் அவரது பெயர் மற்றும் தொடர்பு விவரம் கேட்டு கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது கமெண்டை வைரலாக்கி வருகின்றனர்.
இதற்கு முன்பு விபத்தில் மொத்த குடும்பத்தையும் இழந்த மாணவிக்கு டி.இமான் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.