சினிமா செய்திகள்
null

வீதியில் ஒலித்த குரல்.. அங்கீகாரம் கொடுத்த இமான்

Published On 2023-11-28 14:17 IST   |   Update On 2023-11-28 16:04:00 IST
  • இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
  • இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.

விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.

சமீபத்தில் சிறுமி தர்ஷினி அப்பா குறித்து பாடும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பார்த்த டி.இமான் சிறுமிக்கு உதவி செய்யும் நோக்கில் அவரது பெயர் மற்றும் தொடர்பு விவரம் கேட்டு கமெண்ட் செய்திருந்தார்.


டி.இமான்- தர்ஷினி

இந்நிலையில், டி. இமான், சிறுமி தர்ஷினியின் தந்தையை தொடர்பு கொண்டு சிறுமியின் குரல் வளத்தை பாராட்டியதோடு சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் இமானை சமூக வலைதளத்தில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News