முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அஜய் ஞானமுத்து படக்குழு?
- இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
டிமான்ட்டி காலனி
அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
டிமான்ட்டி காலனி -2
சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.