நரையைக்கூட மைப்பூசி மறைக்காமல்... அஜித் குறித்து பார்த்திபன் பதிவு..
- புதிய பாதை படத்தில் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன்.
- இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
1989-ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், கதை திரைக்கதை வசனம் உள்ளிட்ட பல படங்கை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.
பார்த்திபன்
இந்நிலையில், நடிகர் அஜித் குறித்து பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "வேள்பாரி யாரோ? வாள்பாரி நானே! ஆயிரத்தில் ஒருவனும்,பொன்னியின் செல்வனும் எனக்கொரு ராஜகம்பீரத்தை தந்திருப்பதும், 'சுழல்' சூழ் வரவேற்பும், 'இரவின் நிழல்' இளைய இதயங்களை லயமாக என் வயப்படுத்நியிருப்பதும் நுங்கும் நுரையுமாய் பொங்கி வழியும் நிறைவே!
பார்த்திபன்
குண்டு'ம் குழியுமாய் இருந்த என் பாதைகள் செப்பனிடப்பட்டு(dieting +workouts)புதிய பாதைக்கு மீண்டும் தயாராகி வருகிறேன் வயதென்பதென்ன? வெட்டவெளிதனில் நட்ட கருங்கல்லா நகராமல் நின்றுவிட!கடிகார முட்கள் jagging செல்லும் போது எதிர்திசையில் நகர்ந்துக் கொண்டிருக்கும் இலையுதிர் மரங்களே இருந்தால் சீவி சிங்காரித்துக் கொள்வதும்,கொட்டிவிட்டால் மயிரே போச்சி"என 'Chilla chilla'பாடியே (நரையைக்கூட மைப்பூசி மறைக்காமல் திரை கிழியும் விசிலுடன் அஜீத்தி) துணிவுடன் நாளை எதிர்கொள்வதுமே வாழ்வின் இன்பம் பொங்கல்! புதிய சொல் பொருள் அஜீத்தி = அசத்தி" என்று பதிவிட்டுள்ளார்.
வேள்பாரி யாரோ?
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 27, 2022
வாள்பாரி நானே!
ஆயிரத்தில் ஒருவனும்,பொன்னியின் செல்வனும் எனக்கொரு ராஜகம்பீரத்தை தந்திருப்பதும்,
'சுழல்' சூழ் வரவேற்பும்,
'இரவின் நிழல்' இளைய இதயங்களை லயமாக என் வயப்படுத்நியிருப்பதும் நுங்கும் நுரையுமாய் பொங்கி வழியும் நிறைவே!
Continue >>> pic.twitter.com/tUKH2hakpx