சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ்

மாணவிக்கு ஜி.வி.பிரகாஷ் செய்த உதவி.. பாராட்டும் ரசிகர்கள்..

Published On 2022-10-03 08:34 GMT   |   Update On 2022-10-03 08:34 GMT
  • தமிழில் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
  • இவர் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்றார்.

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'வணங்கான்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


ஜி.வி.பிரகாஷ்

சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.


ஜி.வி.பிரகாஷ்

அந்த புகைப்படத்திற்கான கமெண்டில் மாணவி ஒருவர் "நான் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் என்னுடைய தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வுக் கட்டணம் தொடர்பான விவரங்களை அனுப்பியிருக்கிறேன்" என உதவி கேட்டுள்ளார்.

இந்த கமெண்டை படித்த ஜிவி பிரகாஷ் 'பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டது" என்று பதிலளித்துள்ளார். இந்த செயலுக்காக ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.


Tags:    

Similar News