பீஸ்ட் சரியா போகல.. நெல்சனுக்கு படம் கொடுக்கனுமானு யோசிங்க- ரஜினி பேச்சு
- ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது, "நெல்சன் முதலில் 'ஜெயிலர்' படத்தின் ஒன்லை சொன்னார். சொல்ல சொல்ல என்னை அப்படியே உத்து பார்த்தாரு. 'இவன் ஹீரோவா எப்டி?' ன்னு அவர் மனசுல நினைச்சது எனக்கு கேட்டுடிச்சு. ஆனாலும் அந்த ஒன்லைன் எனக்கு பிடிச்சிருந்தது. அப்பறம் பீஸ்ட் படத்த முடிச்சிட்டு வரேன்னு கிளம்பிட்டாரு.
அந்த படத்த முடிச்சிட்டு வந்து முழுக்கதையும் சொன்னாரு. 'ஜெயிலர்' அறிவிப்புக்குப் பிறகுதான் பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் சரியா போகல அப்போ நிறைய பேர் என்னிடம் நெல்சனுக்குதான் படம் கொடுக்க வேண்டுமா என யோசிக்க சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஒரு இயக்குனர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கிறது.
படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார் நெல்சன். 'காவாலா' சாங்க்ல எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்குனு பில்டப் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. ஆனா, ரெண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும்னு சொல்லிட்டாங்க.