டேய் இது சினிமா டா.. ட்ரெண்டாகும் ஜிகர்தண்டா- 2 டீசர்
- இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் 'ஜிகர்தண்டா'. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 'டேய் இது சினிமா டா' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.