பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்
- இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’.
- இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியானது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'ஜிகர்தண்டா- 2' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Extremely Elated to announce that #JigarthandaDoubleX will have a GRAND RELEASE in Tamil Nadu through @RedGiantMovies_.
— karthik subbaraj (@karthiksubbaraj) October 14, 2023
Blasting worldwide in theatres, this Diwali 2023 ?@offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers #AlankarPandian… pic.twitter.com/FKlEM1nWHi