சினிமா செய்திகள்

எஸ். ஜே. சூர்யா

null

என்ன தலைவரே திரும்பவும் லூப்பா? ஜீவி 2 டிரைலர் வெளியிட்ட எஸ்.ஜே. சூர்யா..

Published On 2022-08-06 14:42 IST   |   Update On 2022-08-06 15:04:00 IST
  • ஜீவி படத்தைத் தொடர்ந்து ஜீவி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
  • சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'ஜீவி'. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்பு அனைவரின் பாராட்டுகள் பெற்று, சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் 2-ம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நடிகர்கள் கருணாகரன், ரோகினி, மைம் கோபி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தொடங்கியிருந்தது. இப்படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.


ஜீவி 2

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஜீவி 2-ம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், "என்ன தலைவரே திரும்பவும் லூப்பா. ஆனா இது வேற மாதிரி இருக்கே" என குறிப்பிட்டுள்ளார். இப்படம் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News