சினிமா செய்திகள்

காடுன்னா திரில்லு தானடா

வைரலாகும் காடுன்னா திரில்லு தானடா பாடல்

Published On 2022-11-13 08:24 GMT   |   Update On 2022-11-13 08:24 GMT
  • அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் படம் 'பெடியா' (ஓநாய்).
  • இப்படத்தில் இடம்பெற்றுள்ள காடுன்னா திரில்லு தானடா பாடல் வெளியாகியுள்ளது.

அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் படம் 'பெடியா' (ஓநாய்). இப்படத்தை மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்குகிறது. இப்பட்ம் வருகிற நவம்பர் 25-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

 

காடுன்னா திரில்லு தானடா

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காடுன்னா திரில்லு தான டா...' வெளியாகியுள்ளது. இப்பாடல் பற்றி இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் பேசியதாவது, "பழங்குடி இசையை அதன் உண்மைத்தன்மை மாறாமல் இந்தப் பாடலின் வழியாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும். பாடகர்கள் விஷால் தட்லானி மற்றும் சுக்வீந்தர் சிங் தங்களின் உணர்வுப்பூர்வமான குரல் மூலம் இப்பாடலுக்கு உயிரூட்டி உள்ளனர். 'பெடியா' திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான 'தும்கேஸ்வரி...' பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த புத்தம் புது பாடலும் அவர்களை பரவசமூட்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்றார்.

இந்த பாடலை தமிழில் அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் எஸ் சுனந்தன் எழுத, பென்னி தயாள் தமிழில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

Similar News