சினிமா செய்திகள்

கமலுக்காக களமிறங்கிய திரைப்பிரபலங்கள்

Published On 2023-11-02 17:54 IST   |   Update On 2023-11-02 17:54:00 IST
  • ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.
  • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


இந்தியன் 2 போஸ்டர்

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோவை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


இந்தியன் 2 போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'இந்தியன் 2' படத்தின் தெலுங்கு வீடியோவை இயக்குனர் ராஜமவுலியும், இந்தியில் நடிகர் அமீர்கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன் லாலும் வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


Tags:    

Similar News