ராமேஸ்வரம் கோவிலில் லியோ படக்குழுவினர் சிறப்பு பூஜை- வெற்றிக்காக பிரார்த்தனை
- விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’.
- இந்த படம் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19) திரைக்கு வருகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ள நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட படக்குழுவினர் இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். படக்குழுவினர் கோவிலில் உள்ள ராம நாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் லியோ படத்தின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த சுற்றுலா வந்தவர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டனர்.