null
விஜய் ஆண்டனி மகள் மறைவு.. லியோ படக்குழு எடுத்த அதிரடி முடிவு
- விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று தற்கொலை செய்துகொண்டார்.
- இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி -மீரா
இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'லியோ' படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் மீராவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று வெளியிடவுள்ள போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.