சினிமா செய்திகள்
null

தேள் கொடுக்கு Continues.. சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..

Published On 2023-11-27 17:36 IST   |   Update On 2023-11-27 17:49:00 IST
  • நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது.
  • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.


இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள லோகேஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,  "ஐந்து படங்களின் இயக்கத்திற்கு பின் கதைசொல்லல் மற்றும் பொழுதுபோக்கின் நிலப்பரப்பை மறுவரையறை செய்ய எனது தயாரிப்பு முயற்சி - ஜி ஸ்குவாட் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்த அதே ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் தயாரிப்பின் முதல் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News