சினிமா செய்திகள்

நடிகரும், அ.தி.மு.க.-வின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி காலமானார்

Published On 2024-04-11 23:54 IST   |   Update On 2024-04-11 23:54:00 IST
  • அரசியல் மற்றும் இயக்குநர் பயிற்சி பள்ளி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
  • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்மணி. நடிப்பு மட்டுமின்றி அரசியல் மற்றும் இயக்குநர் பயிற்சி பள்ளி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அருள்மணி. அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள அருள்மணி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், பிரசாரத்திற்கு இடையில் ஓய்வு எடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

Tags:    

Similar News