சினிமா செய்திகள்
ஜெயிலர் வெற்றி - அனிருத்-க்கு ரூ. 1.4 கோடி மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்து அசத்திய கலாநிதி மாறன்
- ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 25-வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
- இயக்குனர் நெல்சனுக்கு கலாநிதி மாறன் சமீபத்தில் போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.
ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத்-க்கு காசோலை மற்றும் புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார். இந்த காரின் விலை ரூ. 1.44 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.