சினிமா செய்திகள்
முதல் நாளில் இத்தனை கோடிகளா? வசூலை வாரிக் குவித்த லியோ!
- லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (அக்டோபர் 20) ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 'லியோ' திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.148.5 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.