சினிமா செய்திகள்

'லூசிபர் 2 எம்புரான்' இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன்

Published On 2023-10-16 21:49 IST   |   Update On 2023-10-16 21:49:00 IST
  • மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற படம் உருவாகி வருகிறது.
  • இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.

லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்'. இந்த படத்தின் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள். இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பிருத்விராஜ்-க்கு லைக்கா சுபாஸ்கரன் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார். சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

Tags:    

Similar News