null
நடிகை திரிஷாவிற்கு போலீசார் கடிதம்
- நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தியதன் பேரில் மன்சூர்அலிகான் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் திரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை என்று பல்டி அடித்தார். திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
மன்சூர்அலிகானின் பேச்சு தொடர்பாக திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து அவருக்கு ஆயிரம்விளக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் மன்சூர்அலிகான் மீது போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக உங்களிடம் சில விளக்கங்களை கேட்க வேண்டியதுள்ளது. எனவே நீங்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, தாங்கள் அனுப்பியுள்ள கடித்தை ஏற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதா? இல்லை எழுத்துப்பூர்வமாக தபாலில் விளக்கம் அளிப்பதா? என்பது திரிஷாவின் விருப்பமாகும் என்று தெரிவித்தனர். இந்த கடிதத்தை அனுப்பி சில நாட்கள் ஆகிவிட்டது என்றும், இதற்கு திரிஷா விளக்கம் அளிக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனுப்பி உள்ள கடிதத்தை ஏற்று திரிஷா விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.