சினிமா செய்திகள்
சைக்கிள் ரிக்ஷாவில் வலம் வரும் பிரகாஷ் ராஜ்.. வைரலாகும் வீடியோ
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ்.
- இவர் நியூயார்க்கில் சைக்கிள் ரிக்ஷாவில் வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
கே.பாலசந்தர் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான டூயட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். அதன்பின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். சில படங்களை இயக்கியும், தயாரித்தும் அனைவரையும் கவர்ந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் திரையுலகில் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நியூயார்க்கில் சைக்கிள் ரிக்ஷாவில் பிரகாஷ் ராஜ் வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.