சினிமா செய்திகள்

ரவீந்தர் சந்திரசேகர்

எங்களது திருமணத்தை வெளியிட்டு அதிக வருமானத்தை பெற்று விட்டார்கள்.. தயாரிப்பாளர் ரவீந்தர் ஆதங்கம்..

Published On 2022-09-23 19:30 IST   |   Update On 2022-09-23 19:30:00 IST
  • ரவீந்தர் சந்திரசேகர் சினிமா தயாரிப்பாளர் ஆவார்.
  • இவர் அண்மையில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார்.

தமிழில் நட்புன்னா என்ன தெரியுமா, சுட்டக்கதை, முருகைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சினிமா தயாரிப்பளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராகவும் தன்னை முன்நிலைப் படுத்திகொண்டார்.


ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி

அண்மையில் இவர் தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகை மகாலட்சுமி ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தனர்.


ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி

அப்போது ரவீந்தர் சந்திரசேகர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப் பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது. திருமணம் இவ்வளவு பிரபல்யம் ஆக வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல். செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி" என்று கூறினார்.

Tags:    

Similar News