மரணத்திற்கு விசா தேவையில்லை- சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
- சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
- திடீரென சல்மான் கானுக்கு இணைய தளத்தில் கொலை மிரட்டல் வந்தது.
இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருபவர் சல்மான்கான். திரைத்துறையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் காரணமாக ஏற்கனவே அவருக்கு போலீஸ், பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென சல்மான்கானுக்கு இணைய தளத்தில் கொலை மிரட்டல் வந்தது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தாவூத் உங்களை காப்பாற்றுவார் என்ற மாயையில் இருக்கிகாதீர்கள். உங்களை யாராலும் காப்பற்ற முடியாது. சித்து மூஸ் வாலாவின் மரணத்திற்கு உங்கள் பதில் கவனிக்கப் படாமல் இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதும் அவருக்கு இருந்த குற்ற சம்பவங்கள் பற்றியும் நாங்கள் அறிவோம். நீங்கள் விரும்பும் எந்த நாட்டிற்கும் தப்பி செல்லுங்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். மரணத்திற்கு விசா தேவையில்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சல்மான்கானுக்கு வந்த மிரட்டல் பற்றி மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கணக்கில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்து உள்ளது. லாரன்ஸ் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தற்போது சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டலையொட்டி மும்பை போலீசார் சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரித்து இருக்கின்றன.