எல்லா நடிகர்களுக்கும் கமல் ஒரு உத்வேகம்- ஷாருக்கான்
- அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
நடிகர் ஷாருக்கான், ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்து வந்தார். இதில் நடிகர் கமல்ஹாசன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "கமல் மிகவும் அன்பானவர். எல்லா நடிகர்களுக்கும் அவர் உத்வேகமாக இருக்கிறார்" என்று பதிலளித்தார்.
He is too kind and a friend and inspiration for every actor. #Jawan https://t.co/qCZEcE5XRA
— Shah Rukh Khan (@iamsrk) September 3, 2023