null
விஜய் பிறந்தநாளில் புதிய புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் 48-வது பிறந்தநாள் இன்று.
- இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்யின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அரபிக் குத்து என்ற பாடலை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Wishing you a very happy birthday @actorvijay sir ❤️❤️ Best wishes for #Varisu 👍😊 #HBDThalapathyVijay pic.twitter.com/M31q5hn4PI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 22, 2022