திடீரென்று மும்பைக்கு பறந்த சூர்யா- ஏன் தெரியுமா
- நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சூர்யா இரண்டு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பை செல்ல இருக்கிறார். இவர் மும்பை செல்வதற்காக விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.