சினிமா செய்திகள்
null

இந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு எழுந்தேன்.. வெங்கட் பிரபு இரங்கல்

Published On 2023-09-19 11:04 IST   |   Update On 2023-09-19 13:42:00 IST
  • விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


விஜய் ஆண்டனி - மீரா

ஆனால், மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "இந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு எழுந்தேன். விஜய் ஆண்டனி சார் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News