null
விஜய் தேவரகொண்டா அறிவிப்பு.. ராஷ்மிகாவா.. சமந்தாவா..? குழப்பத்தில் ரசிகர்கள்
- நடிகர் விஜய் தேவரகொண்டா இளம் நடிகராக வலம் வருகிறார்.
- இவர் ராஷ்மிகாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகைகளை கவர்ந்து. இப்படத்தில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைதளப் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில், ஒரு ஆணும், பெண்ணும் கைக்கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'நிறைய நடக்கிறது. ஆனால், இது உண்மையில் சிறப்பானது. விரைவில் அறிவிக்கிறேன்' என்று விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா பதிவு
இதற்கு விஜய் தேவரகொண்டா தன் காதல் குறித்து அறிவிக்கவுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், அது ராஷ்மிகாவா? இல்லை சமந்தாவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 'குஷி' திரைப்படத்தின் போது சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக பழகியதாக தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.