null
தவறான அறுவை சிகிச்சை.. மனைவிக்காக படம் இயக்குவதை விட்ட விக்ரமன்
- இயக்குனர் விக்ரமன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் கடைசியாக நினைத்தது யாரோ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன். அதன்பின்னர், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இவர் கடைசியாக கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன்பின் இயக்கத்தில் இவர் பெரிதாக நாட்டம் காட்டவில்லை. சமீபத்திய ,தன்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்கள் இயக்கவில்லை என விக்ரமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, குச்சுப்புடி கலைஞரான ஜெயப்பிரியா மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் தன் கால்களை கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாக விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.