சினிமா செய்திகள்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த விஷ்ணு விஷால்

Published On 2023-12-13 13:29 IST   |   Update On 2023-12-13 13:29:00 IST
  • விஷ்ணு விஷால் தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.
  • 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "மிச்சாங் புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்." என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News