சினிமா செய்திகள்
null

நடிகர் பார்த்திபன் புகார்... போலீசார் வழக்கு பதிவு

Published On 2024-07-05 11:27 IST   |   Update On 2024-07-05 11:28:00 IST
  • 4-ல் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், முக்கிய காட்சிகளை ஏப்ரலுக்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார்.
  • புகாரின் அடிப்படையில் 406/420 ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் பார்த்திபன் தற்போது TEENZ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளராக கோவையை சேர்ந்த சிவபிரசாத் பணியாற்றி வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 10 அல்லது 20-ம் தேதிக்குள் பணிகளை முடிப்பதாகக் கூறி ரூ.68.50 லட்சத்தை சிவபிரசாத் கேட்டுள்ளார். ரூ.42 லட்சம் செலுத்திய பார்த்திபன் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காததால் ஏப்.19-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளார்.


அப்போது, 4-ல் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், முக்கிய காட்சிகளை ஏப்ரலுக்குள் முடிக்க முடியாது என கூறியிருக்கிறார். மேலும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி ரூ.88.38 லட்சம் கேட்டு பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் சிவபிரசாத்.

இதையடுத்து, தன்னை ஏமாற்றியதாக கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் மீது பந்தயசாலை காவல்நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் 406/420 ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News