சினிமா செய்திகள்
null

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் "திடீர்" ராஜினாமா

Published On 2023-11-16 14:28 IST   |   Update On 2023-11-16 14:28:00 IST
  • தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம்.
  • கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம். இவருக்கு சொந்தமான தியேட்டர்கள் திருப்பூரில் உள்ளது. இங்கு கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் சக்தி சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் இன்று சக்தி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன். எனது சொந்த வேலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

Tags:    

Similar News