null
'3 தசாப்தங்களுக்குப் பிறகு இருவர்..' பிரகாஷ் ராஜ் நெகிழ்ச்சி
- மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர்.
- இலக்கிய விழாவில் மணிரத்னம் மற்றும் பிரகாஷ் ராஜ் சந்தித்து உரையாடி உள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இருவர்'.
தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள் இருவரின் நட்பை மறைமுகமாகப் பேசிய 'இருவர்' மணிரத்னம் இயக்கிய படங்களில் இதுவரை தனித்த இடம் பெற்றுள்ளது. இதில் பிரகாஷ்ராஜின் நடிப்பு மிகவும் பேசப்பட்ட ஒன்று.
தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களிலும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் இலக்கிய விழாவில் மணிரத்னம் மற்றும் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு உரையாடி உள்ளனர்.அந்த புகைப்படத்தைத் தனது எக்ஸ் பாக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், மூன்று தசாப்தங்களுக்கு பிறகு 'இருவர்.. பேரின்பம்' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.