தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்சி! ரிலீசுக்கு தயாராகிய புதிய திரில்லர் திரைப்படம் "தென் சென்னை"
- ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”
- புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் "தென் சென்னை"
சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ரங்கா.
இதில் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், 'பொன்னியின் செல்வன்' நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
"டாடா" திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படத்திற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார்.
சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படதிற்க்கு ஒளிப்பதிவாளராக சரத்குமார், படத்தொகுப்பாளராக இளங்கோவன் கைகோர்த்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்டர் லுக்ஸ், பாடல் மற்றும் டீசர் ட்ரைலர் சமீபதில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதில் தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் வருகின்றன. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும், நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்று காட்சிகள் தத்ரூபமாக படமாக்கி உள்ளனர், இது ரசிகர்களை கவறும் வகையில் இருக்கும் என படகுழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.