null
விஷாலின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?
- வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பவர் விஷால்.
- நடிப்பு மட்டுமின்றி திரையுலகில் பல துறைகளில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படம் மூலம் அறிமுகமான விஷால் அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்த நிலையில், நடிகர் விஷால் நடிக்கும் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஷால் - கவுதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.