சினிமா

என்னுடைய இந்தியா இதுவல்ல: ஏ.ஆர்.ரகுமான் வேதனை

Published On 2017-09-08 13:55 GMT   |   Update On 2017-09-08 13:56 GMT
பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இது என்னுடையை இந்தியா அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் சில இசை நிகழ்ச்சிகளை தொகுத்து, ‘ஒன் ஹார்ட்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமானிடம் பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், ‘இந்த சம்பவத்தால் நான் வேதனை அடைந்துள்ளேன். இதைப்போன்ற செயல்கள் இந்தியாவில் நடப்பதில்லை. இது என்னுடைய இந்தியா அல்ல, முற்போக்கான கருணையுள்ள இந்தியாவைதான் நான் காண விரும்புகிறேன்’ என குறிப்பிட்டார்.

உங்களுடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். எனது வாழ்க்கையப் பற்றிய படம் இப்போதைக்கு தேவை இல்லை. எனது மறைவுக்கு பிறகு யாராவது படம் தயாரிக்கட்டும் என அவர் தெரிவித்தார்.

‘ஒன் ஹார்ட்’ திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபம் ‘ஒன் ஹார்ட்’ தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Similar News