காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2வது தங்கம்- பிரதமர் மோடி வாழ்த்து
- பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
- ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரிமி தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் 300 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுங்கா முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ஜெரிமி இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், " நமது யுவசக்தி சரித்திரம் படைத்து வருகிறது! ஜெரேமி ல்ரினுங்காவுக்கு வாழ்த்துக்கள். அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் மற்றும் ஒரு அற்புதமான சாதனையையும் படைத்துள்ளார்.
இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.