கிரிக்கெட் (Cricket)
மகளிர் டி20 உலக கோப்பை - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 124 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கியூபெர்தா:
8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.