கிரிக்கெட் (Cricket)

Hall Of Fame.. காசிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஜடேஜா- சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ

Published On 2024-12-25 08:28 GMT   |   Update On 2024-12-25 08:28 GMT
  • அமெரிக்காவில் காசிக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.
  • அவருக்கு சிஎஸ்கே வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் செயலாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி கல்லிடைக்குறிச்சி எஸ் விஸ்வநாதன் என்ற காசியை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள ஹார்ட்போர்ட் நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.

கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த காசிக்கு, பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்த தகவலை, தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அது குறித்த வீடியோ தொகுப்பை சிஎஸ்கே அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள் ஜடேஜா தமிழில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ருதுராஜ், அஸ்வின், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் ஆகியோர் இந்த வீடியோ மூலம் காசியை பாராட்டி உள்ளனர்.

இந்த வீடியோ முடிவில் ஜடேஜா, காசி சார் சீக்கிரம் சென்னையில் பார்ப்போம் என தமிழில் கூறியது சிஎஸ்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜடேஜா பேசும் தமிழ் அருமையாக உள்ளது எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

Similar News