4வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
- இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
- முதல் டெஸ்டில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, சாம் கோண்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்.