கிரிக்கெட் (Cricket)

பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்வேன்.. இளம் வீரர் கான்ஸ்டாஸ் சவால்

Published On 2024-12-26 12:46 GMT   |   Update On 2024-12-26 12:46 GMT
  • உலகத்தரம் வாய்ந்த பும்ரா, மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன்.
  • அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம்.

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பயந்து விளையாடும் பும்ரா ஓவரில் இவர் 2 சிக்சர்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இது கனவு நிஜமான தருணம். ஏனெனில் ரசிகர்களால் நிறைந்திருக்கும் மைதானத்தை பாருங்கள். பட் கமின்ஸ் உட்பட அனைவரும் என்னை அணிக்குள் வரவேற்றார்கள். பயமின்றி விளையாடுமாறு கேப்டன் கமின்ஸ் என்னிடம் சொன்னார்.

பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட் அடிப்பது பற்றி நேற்று திட்டமிடவில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். இருப்பினும் அவர் மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன்.

அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம். இந்த வகையில் அவரைத் தொடர்ந்து நான் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன். அவரும் கம்பேக் கொடுக்கலாம். அப்போது என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

என்று சாம் கான்ஸ்டாஸ் கூறினார்.

Tags:    

Similar News