கிரிக்கெட் (Cricket)

68/5.. சரிவில் இருந்த தமிழ்நாட்டை சதத்தின் மூலம் மீட்ட ஷாருக்கான்.. உ.பி.க்கு 285 ரன்கள் இலக்கு

Published On 2024-12-26 10:13 GMT   |   Update On 2024-12-26 10:13 GMT
  • முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
  • இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் உத்தர பிரதேசம்- தமிழ்நாடு அணிகள் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷாருக்கான் சதம் விளாசி அசத்தினார்.

இறுதியில் தமிழ்நாடு அணி 47 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 132 ரன்களும் முகமது அலி 76 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags:    

Similar News