கிரிக்கெட் (Cricket)
null

இதுவரை இல்லாத ரசிகர்கள் கூட்டம்: வரலாறு படைத்த ஆஸ்திரேலியா- இந்தியா போட்டி

Published On 2024-12-26 11:06 GMT   |   Update On 2024-12-26 11:07 GMT
  • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவித்தது.
  • ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். 

அதன்படி 87 ஆயிரத்து 242 ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் கண்டு களித்துள்ளனர்.

Tags:    

Similar News