கிரிக்கெட் (Cricket)
null

மீண்டும் இரட்டை சதம் விளாசிய முன்னாள் சிஎஸ்கே வீரர்- வைரல் வீடியோ

Published On 2024-12-26 09:30 GMT   |   Update On 2024-12-26 11:35 GMT
  • கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
  • 6 போட்டிகளில் 728 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வி உள்ளார்.

இந்தியாவில் தற்போது 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என்பதால் இது ஒரு அங்கீகரிக்கப்படாத போட்டியாகவே அமைகிறது.

இந்நிலையில் நேற்று விதர்பா - உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 406 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து உத்தர பிரதேசம் அணி களமிறங்கி விளையாடியது. அதிரடியாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் 2-வது முறையாக இரட்டை சதம் விளாசினார். அவர் 95 பந்தில் 202 ரன்கள் குவித்தார். இதனால் உத்தர பிரதேசம் அணி 41.2 ஓவரில் 409 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இவர் அடிக்கும் 4 சதம் இதுவாகும். 6 போட்டிகளில் 728 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வி உள்ளார்.

சமீபத்தில் தான் திரிபுரா அணிக்கு எதிராக 97 பந்தில் 201 ரன்கள் ரிஸ்வி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. 

ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பெரிய அளவில் சொபிக்கவில்லை. இதனால் இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. டெல்லி இவரை வெறும் ரூ. 95 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

Tags:    

Similar News