null
ஆஸ்திரேலிய அறிமுக வீரர் கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய கோலி.. வைரல் வீடியோ
- இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார்.
- கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை கான்ஸ்டாஸ் நாலாபக்கமும் சிதறிடித்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.
அப்போது கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவர்களுக்கு இடையே கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.
இந்த வாக்குவாதம் முடிந்தவுடன் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே கான்ஸ்டாஸ் பவுண்டரி அடித்தார். இதனையடுத்து கோலியின் முகம் வாடியது குறிப்பிடத்தக்கது.