கிரிக்கெட் (Cricket)

அனைத்து வடிவங்களிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி

Published On 2023-02-15 16:03 IST   |   Update On 2023-02-15 16:03:00 IST
  • ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.
  • இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது.

நாக்பூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.

இந்தியா தற்போது 115 புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (111), இங்கிலாந்து (106) உள்ளன.

இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்த பிறகு, இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணியாக மாறியது.

ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை. இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை முறியடித்த முதல் இந்திய கேப்டன் ரோகித் ஆவார்.

கடந்த மாதம் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியா நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. இலங்கையை 3-0 என்ற கணக்கில் கிளீன் ஸ்வீப் செய்த பிறகு இந்த வெற்றி கிடைத்தது.

முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளவும், இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தவும் இந்தியா அடுத்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். ரோகித் சர்மா தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவை 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தால், தொடரில் மிகப்பெரிய முன்னிலை பெறும்.

Tags:    

Similar News