null
டி20 உலகக் கோப்பை - எதிர்பார்க்கப்படும் இந்திய அணி உத்தேச பட்டியல்
- உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
- அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவு.
ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் 20 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்திய அணியின் பேட்டிங் பிரிவில்- ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெறுவர் என கூறப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில்- ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே மற்றும் அக்சர் பட்டேல் இடம்பெறுவர் என தெரிகிறது.
ஸ்பின்னர்கள் பிரிவில்- குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடம்பெறுவர் என்று தெரிகிறது. வேகப் பந்துவீச்சாளர் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது.