கிரிக்கெட்

நியூசிலாந்து- இங்கிலாந்து அணியின் கிளைகள்: வைரலாகும் கிங்ஸ் அணிகள் குறித்த மீம்ஸ்

Published On 2023-12-20 07:52 GMT   |   Update On 2023-12-20 07:52 GMT
  • சென்னை அணியில் 4 நியூசிலாந்து வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
  • பஞ்சாப் அணியில் 4 இங்கிலாந்து அணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்த ஏலத்தில் டாரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. மிட்செல் 14 கோடிக்கும் ரவீந்திரா 1.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை அணியில் 4 நியூசிலாந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னை அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் இருந்து வருகிறார். இது தொடர்பான மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து வீரரான பிளெமிங் தனது நாட்டு வீரர்களை ஒன்று சேர்க்கிறார் என சமூக வலைதளங்களில் கிண்டால கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது.


இதேபோல் பஞ்சாப் அணியில் 3 இங்கிலாந்து வீரர்கள் இருந்த நிலையில் நேற்றைய ஏலத்தின் போது கிறிஸ் வோக்ஸ் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவரை 4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன்மூலம் 4 இங்கிலாந்து வீரர்கள் பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் செயல்பட்டு வருகிறார். இவர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். அந்த முறை இங்கிலாந்து அணி ஒருநாள் உலகக் கோப்பை கைப்பற்றியது.

இவரும் இங்கிலாந்து மீது உள்ள பற்றால் இங்கிலாந்து வீரர்களை பஞ்சாப் அணிக்கு தேர்வு செய்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மற்ற அணிகளில் ஒரு அணியை சேர்ந்த வீரர்கள் அதிகபட்சமாக 3 வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News