கிரிக்கெட் (Cricket)
ஐ.பி.எல். 2024: ராஜஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இன்றைய போட்டி ஜெய்பூரில் நடைபெறுகிறது.
- டெல்லி அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த தொடரில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. இதில் ராஜஸ்தான் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.
முதல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடர ராஜஸ்தான் அணியும், இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் டெல்லி அணியும் களமிறங்குகிறது.