முத்தரப்பு ஒருநாள் தொடர்- 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து
- வங்காள தேசத்தில் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
- முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் வருகிற 14-ந் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி களமிறங்கியது. வங்காள தேச அணியின் பந்து வீச்சை நாளாபுறமும் அடித்து ரன்களை குவித்தனர். வங்காள தேச பந்து வீச்சாளர்கள் 10 ரன்ரேட்டுக்கு ரன்களை வாரி வழங்கினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக கான்வே -கிளின் பிலிப்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
வங்காளதேசம் அணி தரப்பில் சைபுதீன் மற்றும் எபடோட் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காள தேச அணி களமிறங்கியது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கேப்டன் சகீப் அல்ஹசன் 70 ரன்கள் குவித்தார். மேலும் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 1 தோல்வியுடன் உள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 தோல்வியுடனும் வங்காள தேசம் அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் நாளை மோதுகிறது.
முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் வருகிற 14-ந் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.